வரலாறு > திருக்குறல் ஒரு பௌத்த நூல்.
Suresh Bhim என்பவரது பதிவு
திரிக்குறல் ஒரு பௌத்த நூல்.
1831ம் ஆண்டு வித்வான் தாண்டவராய முதலியார், வித்துவான் முத்துச்சாமிப் பிள்ளை ஆகியோர் மூலமாக அச்சிட்டு வெளிவந்த திரிக்குறள் நூல் மக்கள் மத்தியிலே பவனிவந்தது.
1835ல் விசாகப் பெருமாள் ஐயர் அச்சிட்ட திருக்குறள் வரலாற்றிலும் 1837ல் விசாகப் பெருமாளின் குறளில் சரவணப் பெருமாள் ஐயர் அச்சிட்ட நூல்களிலும் திருவள்ளுவர் பிராமணர் வகுப்பைச் சார்ந்தவர் எனும் பொய் வாதங்களை அயோத்திதாசர் எதிர்த்தார் என அறியமுடிகிறது.
அதே நேரத்தில் திருவள்ளுவர் பௌத்தர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அயோத்திதாசப் பண்டிதர் வாதாடினார்.
1902 அக்டோபரில் “ஞான போதினி” இதழில் சருக்கை சுந்தராச்சாரியார் இராமசாமி ஐயங்கார் திருவள்ளுவர் மகாயான பௌத்தத்தைச் சார்ந்தவர் எனவும் கூறியுள்ளார்.
1920 பிப்ரவரியில் கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸ் சாக்கை பவுத்தச் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் பேராசிரியர் பி.இலட்சுமிநரசு அவர்கள் தலைமையில் சாத்தூர் ஆர்.விஸ்வநாத பாரதி அவர்களும் திருவள்ளுவர் பவுத்தரே என்று ஆதாரங்களுடன் பேசியுள்ளார்.
திருக்குறள்-திரிக்குறள் என்று பயன்படுத்திய விதம் பற்றி ஆராய வேண்டுமானால் ,
அதற்கு உதாரணம் பண்டிதமணி அயோத்திதாசர் எழுதிய “பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம்“ எனும் நூலில் திரிமந்திரம், திரிவாசகம், திரிபீடகம், திரிக்குறள் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘ரி’ எனும் சொல் ‘ரு’ எனும் சொல்லாக குறளை மொழிபெயர்த்தவர்களால் கையாளப்பட்டிருக்கலாம் என்ற வாதம் ஏற்படுகிறது.
‘ரி’ எனும் சொல் பாலிச் சொல்லாகவும் ‘ரு’ எனும் சொல் சமஸ்கிருத சொல்லாகவும் பயன்படுத்திய காலத்தில் மொழியாக்கம் செய்தவர்கள் திரிக்குறளை - திருக்குறளாக மாற்றி இருப்பார்கள் எனும் ஐயமும் தோன்றுகிறது.
எது எப்படி இருப்பினும் உலகப் பொதுமறை நூலை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை கந்தப்பன் அவர்களையும் எல்வீஸ் பிரபுவையும் சாரும்.
திருவள்ளுவர் பௌத்தர் என்று கருதப்பட்டால் திருக்குறள் பௌத்த சிந்தனையைத் தாக்கியதா? என்ற ஐயப்பாடும் தோன்றுகிறது.
பகவான் புத்தன் வாழ்க்கையை “திரிபீடகம்“ நூல் விளக்குகிறது.
திரிபீடகம் மூன்று வாழ்க்கை நெறிகளை போதிக்கிறது.
அவை கன்மபாகை, அர்த்தபாகை, ஞானபாகை என்பனவாகும்.
கன்மபாகை - தீமை என்னும் பாவம் செய்யாதிருத்தல், மெய்ப்பொருள் அறிதல் இதன் பெயர் “பொருட்பால்”
அர்த்தபாகை - மெய்புற உணர்ச்சியுடன் நல்வழியில் நடத்தல், நன்மை தரும் அறநெறியைக் கடைபிடித்தல் இதன்பெயர் “அறத்துப்பால்”
ஞானபாகை - உள்ளத்தை தூய்மை செய்தல், மெய்யின்பமாய்ப் பேரின்பமாய்ப் பேரின்ப உணர்ச்சி. இதன்பெயர் “காமத்துப்பால்”
திரிபீடகத்தில் காணப்படும் பகவான் புத்தரின் மூன்று வாழ்க்கை தத்துவங்களை மையமாகக் கொண்டு முப்பால் பெருமையை உலகிற்கு தந்த திருவள்ளுவர் பௌத்தர் என்றும், திருக்குறள் என்பது ‘திரிக்குறள்’தான் எனவும் பலரால் கருத இடம் இருப்பதை அறிய முடிகிறது.
திரிக்குறள் தமிழர்களுக்கு அறநெறி கூறும் நூல், வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காகத் திகழும் நூல் என்பதனை உலகத் தமிழர்கள் அறிந்து கொள்வோம்.
Comments
Post a Comment