பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!
இந்திய கபாடி விளையாட்டுவீராங்கனை #கார்த்திகா எக்ஸ்பிரஸ்
கடற்கரை காற்றுச் சிலுசிலு என்று
குளிர்ந்துக் குதூக ளிக்கின்றதே!
எதனால்?
கடல்மணல் தொட்டுச் செல்லமாய்
அலைகள் கவிதை படிக்கின்றன!
எதனால்?
படபடவென்றுப் பனிசறுக்கி முகில்(கள்)
நிலவோடுச் சடுகுடு விளையாடிடுதே
எதனால்?
மண்நோக்கி விண்ணில் தாரகைகள் கண்சிமிட்டி
சென்னையில் அதிசயிப் பதுஎதுவோ?
கண்ணகி நகர்-சுஜி! எழுநீ கபடி ராணி விளையாடு தமிழே!
எனும்...பேதமை! பேதமிலா ரசிகர் உணர்வே!
மாண்புமிகு முதலமைச்சர், தமிழ் நாடு
அவர்கள் மேலான கவனத்திற்கு!
அரசுப் பதவி, கண்ணகி நகர் கபடி
இளவரசி கார்த்திகாவின் இதைய சமூக
உணர்வுகட்கு சரிப்பட்டு வராது. மக்கள்
முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்.
இளமையில் கல்! - இது ஆங்கிலேயர்
காலத்தில் சுதந்திரம் அடைவதற்கு
முன் இருந்த நிலை.
இளமையில் நில்! - திராவிட மாடல்
ஆட்சியில் இளம் மாணவர்களின்
இன்றைய சூழல்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மனம்
வைத்தால் கண்ணகி நகர் கபடி வீராங்கனை
கார்த்திகாவை (தி மு க)
வேட்பாளராக வெற்றி அடையசெய்து
சட்ட மன்ற உறுப்பினர் பதவியை
வழங்கி அன்னாரது சமூக பணி ஆதங்கம்
சிறக்க உற்சாகம் தரலாம்.
மற்றபடி அரசு தரப்பில் வீடுப் போதும்;
அரசு பதவி சுகம் வேண்டாம்.
அவரது கபடி விளையாடுவதில் ஆர்வம்
தடைப்பட வேண்டாம்.
ஊக்க தொகை ரூபாய் அய்ந்துக்
கோடி வழங்க வாழ்த்துக்கள்!
குறிப்பு:
அரசுப் பணியில் நிபந்தனை உள்ளது.
அங்கே (அரசு அலுவலகங்களில்) சரஸ்வதி பூசை
ஆயுத பூசை அரசு விதிகளை மீறிய மத தீவிரம்
வெள்ளி கிழமை தோறும் பூசை நடைமுறையில்
உண்டு; அரசு ஏதானாலும் ஓதுவோர் சாதி
ஆதிக்கத்தை முற்றுமாக ஒழிக்க முற்பட்டதில்லை;
அரசியல் வெளிப்படையாக இயங்க தடை உண்டு.
அதனால் அரசு பணியை கார்த்திகா ஏற்பாரானால்
சமூக முன் னேற்றம் அடிப்படை ஆதங்கம் மற்றும்
கபடி விளையாட்டு மீதான ஆர்வம் பட்டுப் போகலாம்.
பேத~வந்தேறி ஆன்மிக சாக்கடைகள்! பின்தள்ளிய வேத(னை)சூதுகள்!
Boys 360 என்பவரது பதிவு
Gopu V Ck's post
பரிசுத்தொகை விளையாட்டுக்கேத்த மாதிரி இருக்கலாம்… ஆனா ஊக்கத்தொகை யாருக்கு அதிகமா தேவைப்படுமோ
அவங்களுக்கு தான் அதிகமா இருக்கனும்…
-- இம்சை அரசி தென்றல்.
பலாவை பிளந்துத் பகைபால் எறிந்து;
அழாசுளை~து ளாவும் அறிவே!
நிலாஎன
பேதம்பிய் சாதிஎறி பேதமை நீக்கிசம நீதிகாண் நேர்மை அரசு!
அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...
நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்!
பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி...
வழியினின்று விழிகளை விலக்கி பேதம்ஓதும்மத...
இழிவுகளை நீக்கு நேர்மை இந்தியா தென்படும்!
பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;
இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;
உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;
புழுத்த பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;
வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;
அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!
கார்த்திகா ஒரு சாதாரண உழைக்கும் வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தந்தை: ரமேஷ் (கே. ராமசாமி). இவர் கட்டுமானத் தொழிலாளி (Centering Work) அல்லது ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.
தாய்: சரண்யா. இவர் ஆரம்பத்தில் மாநகராட்சிப் பணியாளராகப் (Civic Worker) பணிபுரிந்தார். கார்த்திகாவின் கபடி கனவுக்கு நிதியளிக்க தற்போது ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார். கபடி விளையாட குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு வந்தபோது இவரே தனது மகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
சகோதரி: ஆர். காவியா. இவரும் ஒரு கபடி வீராங்கனை ஆவார். இவர் முன்னதாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் (Khelo India Youth Games) வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
👉 குறிப்பு: கடினமான பொருளாதாரச் சூழலில் இருந்து வந்தாலும், கார்த்திகா தனது தந்தையின் பழைய ஷூக்களை அணிந்து, பொதுப் பூங்காவில் பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கே. ராஜி பயிற்சி அளித்துள்ளார்.
🏅 சாதனை மற்றும் அங்கீகாரம்
பஹ்ரைனில் நடந்த 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அவர் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகையைப் பெற்றார்.
கண்ணகி நகர், தூய்மைப்பணியாளர் என இரண்டும் திமுக-அதிமுக அரசுகள் உருவாக்கி சீர்கேட்டிலிருந்து ஒரு விளையாட்டு வீரர், அதுவும் ஒரு பெண் மேலெழுந்து வந்ததற்கே நாம் உச்சிமுகர்ந்து கொண்டாட வேண்டும்.
கண்ணகி நகர் என்பது பால*ஸ்தீன காஸா குடியிருப்பை போல திறந்த வெளி சிறைச்சாலை. முறையான கல்வி வசதி, கல்லூரி வசதி, மருத்துவமனை வசதி, பயிற்சி கூடங்கள் என எதுவுமற்ற, தமிழ்நாட்டின் 'தாராவி', தென்னிந்தியாவின் 'ஹார்லெம்' எனும் வகையில் கொட்டிகுவிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளாக கண்ணகிநகர், பெரும்பாக்கம் போன்றவை கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை பல லட்சம் சென்னையின் பூர்வகுடிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறே அனகாபுத்தூரில் இவ்வாண்டு மக்கள் துடைத்தெறியப்பட்டனர்.
கண்ணகி நகர் போன்றவை சென்னையின் பூர்வகுடிகளை,ஏழைகளை குப்பையை போல திமுக-அதிமுக ஆட்சிகள், அதிகாரவர்க்கம், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், நீதியரசர்கள் தூக்கிவீசும் 'குடியிருப்பு குப்பைத் தொட்டி'.
போதுமான வசதிகள் எதுவுமற்று, கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு சென்னையின் தீண்டாப்பகுதியாக மாற்றபட்ட குடியிருப்புகளில் ஒன்றுதான் கண்ணகிநகர். சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு கிடைத்த அநீதியை குறிக்கும் சொல்லாக திராவிடமாடல்கள் வைத்த பெயர் ' கண்ணகி நகர்'.
சமூக சீர்கேடுகள், போதைபொருட்கள், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியன வளருமளவு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு 'கிரிமினல்களாக' முத்திரை குத்தப்பட்ட நிலம் அது. கண்ணகி நகருக்குள்ளாக மனித உரிமை அமைப்புகள் கூட இயங்கமுடியாது எனும் நிலை.
இந்நிலத்தில் இருந்து பணி செய்யும் தூய்மைப்பணியாளருக்கு '13000+' எனும் அளவில் ஊதியம். இதில் விடுமுறை கிடையாது, ஓய்வுநாள் கிடையாது, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் என எதுவும் கிடையாது. அன்றாடம் 20 கி.மி நகருக்குள் பயணம் செய்து பணி இடம் செல்ல வேண்டும்
தனியாரிடத்தில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு கொடூரமாக சுரண்டப்படும் ஒப்பந்தங்களை திமுக-அதிமுக அரசுகள் 25 ஆண்டுகளாக தொடர்ந்து போட்டன. இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டே ' கார்த்திகா'வின் தாயார் அவரை வளர்த்தெடுத்துள்ளார். கார்த்திகாவின் பயிற்சி, உணவு, உடைக்கான செலவினை கூட இந்த சம்பளம் பெற்றுத்தராது.
இன்றும் கூட தூய்மைப்பணியாளர்கள் ' ராம்கி' ' அர்பேசர்' ' ப்ரீமியர்' எனும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக போராடி மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கார்த்திகாவின் தாயாரும் அடக்கம் எனில் தமிழக அரசை எப்படியாக நாம் பார்ப்பது?
2017ம் ஆண்டில் 4 மாதம் புழல் சிறையில் நான் இருந்த பொழுது, எங்களது கொட்டடிக்கு அன்றாடம் புது கைதிகள் கொண்டு வரப்படுவார்கள். இளைஞர்களாக இருப்பார்கள். சிலருக்கு கைகால்கள் உடைக்கப்பட்டு கட்டுபோடப்பட்டிருக்கும். அவர்கள் மீதான வழக்கு என்பது 'அதானி-அம்பானிக்கள்' மீதான குற்றச்சாட்டு போல சாதாரண ஆயிரம்கோடி ரூபாய் ஏமாற்று எனும் குற்றங்களாக அல்லாமல் சண்டை சச்சரவு, சட்டை கிழித்தது, அண்டைவீட்டாருடன் முரண்டுபிடித்தல் எனும்வகையில் 'போர்க்குற்றம்', 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்' என எண்ணுமளவில் 'குற்றங்கள் செய்திருப்பதாக' ஏழைப்பங்களானான தமிழக காவல்துறையால் கைது செய்து சிறையில் அடைப்பதை அன்றாடம் பார்த்திருக்கிறேன். நான்கு மாதங்களில் நூற்றுக்கணக்கானவர் இவ்வாறு 'வழக்குகளில்' சிக்க வைக்கப்பட்டு வருவார்கள். இவர்க்ள் கண்ணகி நகர் , பெரும்பாக்கம் பகுதியை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.. போதுமான வழக்கறிஞர் உதவிகூட கிடைக்காத நிலை இவர்களுக்குண்டு.
இந்த வழக்குகளின் காரணமாக படித்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பற்று போகும். தவறே செய்யாத இளைஞர்கள் மீது வழக்கு பாய்வதெல்லாம் சர்வசாதாரணம்.
சமீபத்தில் திமுக அரசின் சனாதன எதிர்ப்பு போராளி 'எஸ்.வி.சேகர்' சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட 'தொல்காப்பிய பூங்கா' என்பதே எஸ்.வி.சேகர் வீட்டின் பின்பக்கம் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டே உருவாக்கப்பட்டது. இன்னும் அடையாற்றின் கரையோரம் எத்தனை வீடுகள் இடிபட போகின்றன என தெரியாது. எத்தனை கார்த்திகாக்கள் கண்ணகி நகரை நோக்கி துரத்தப்பட போகிறார்கள் என தெரியாது.
கார்த்திகா என்பவர்
திமுக அரசு, அதிமுக அரசு, அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், நீதிமன்றம், காவல்துறை என பலர் உருவாக்கி வைத்த தடைகளை உடைத்து வென்றிருக்கிறார். இதுதான் அவரது பெருவெற்றி.
அந்த வகையில் ஆசிய அளவிலான போட்டி என்பதில் வெற்றி பெறுவதென்பது அவரது கால்தூசுக்கு சமம். அவர் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூரிலிருந்து வந்திருந்தால் எஸ்.வி.சேகரின் அப்பாக்களுக்கு கிடைக்கும் மரியாதை, பாண்டேக்களின் அப்பாக்களுக்கு கிடைக்கும் மரியாதை போன்று திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு கார்த்திகாவின் திறமைக்கேற்ப சில கோடிகள் கொடுக்கப்பட்டுக்கும்.
கார்த்திகாவின் தாயாருக்கு உரிய ஊதியத்தை திமுக-அதிமுக அரசுகள் கொடுத்திருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் அவரது தாயார் 25 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை சேகரித்து மகளுக்கு போதிய உதவிகளைச் செய்திருப்பார்.
கார்த்திகாவின் தாயாரிடமிருந்து தமிழக அரசுகள் சுரண்டிய உழைப்புத் தொகையை தற்போது நட்ட ஈடாக கொடுத்திருக்கிறார்கள் என வேண்டுமானால் நாம் ஆறுதல் அடையலாம்.
தமிழக அரசு நடத்தும் வன்முறையை உடைத்து உயர்ந்து நிற்கிறார் நம் கார்த்திகா. போட்டிகளில் வெல்வதென்பது அவருக்கு இதைப்போல கடினமானதல்ல. திமுக-அதிமுக-அதிகாரிகளின் தடையை உடைத்தவர், நிச்சயம் மென்மெலும் உயரத்தை அவர் அடைவார்.
அவர் சென்னையின் மகள். பூர்வகுடி மகள். துரத்தப்பட்டவர்களின் மகள்.
கார்த்திகாவிற்கான நன்கொடையை மக்களிடமிருந்து திரட்டித் தர முன்முயற்சி எடுப்பதே அவருக்கான சிறப்பாக அமையும். யாரேனும் தொடங்கிடுங்கள் மே 17 இயக்கம் துணை நிற்கும்.
பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்!
சுண்டு:
அனிதா/கௌசல்யா
கார்த்திகா எக்ஸ்பிரஸ்!
ராஜா 7ம.நே > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!