பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > ஜெமிமா ரோட்ரிக்ஸ்.
உச்சி குளிர்ந்தது உள்ளம் இனித்தது
மெச்சிட மெச்சிட வாசகர் மெச்சலில்
அச்சம் அகன்றுநல் அன்பு மனங்களில்
சொக்கி சுழலுதுச் சிட்டு!
ஒரே சாதி நம்நாடு என மாறும் நாளில் உருவாகும்
ஒற்றுமை ஆரவார பிரமிப்பு!
இதோ அந்தபடிக்கு இன்றுநான் காணுகின்றேன்
இனியஉன் முகத்தில் பூரிப்பு சிரிப்பு!
வந்தேறி பார்பன பெண்ணுக்கு ஒவ்வொரு
பிரசவத்திலும் இரட்டை பிள்ளைகள்!
ஒன்று எதற்கும் பிறப்போடு தகுதி
மற்றொன்று சாதி!
பார்ப்பனர் அல்லாத பெண்ணுக்கு
எதிலும் தகுதி விடுப்படும்;
குழந்தைகள்பிறப்பாலே சாதிபெய
ரோடு விடுபடாதுப் பிறக்கும்!
தெய்வத்தால் ஆகாது; எனினும்
முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்!
-- நம் மூத்த முப்பட்டன்
திருவள்ளுவர் ஞானம்!
கதிரவன் கண்டுப் பூமி சுழல்கின்றது!
பூமியை கண்டு நிலவுச் சுழல்கின்றது!
கிரகம் ஏழும் கண்டுக் கதிரவன் சுழல
பிரபஞ்சம் சுழற்சியில் அகில உயிர்கள்
பயணம் இயற்கையின் இரவுப்பகல்
தயவில் தடையின்றி தொடர்கின்றது!
பூமியில் உயிர்கள் பிறந்து உயர்ந்து
வாழ்ந்து மறைவது இயற்கை இயல்பு;
கடவுள் ஊழ்வினை கர்மவினை
வினைபயன் யாவும் வந்தேறி மாசு
சோதிட மோசடி வழி ஆதிக்க கணக்கு!
மகளே மயங்காதே!உன் தகுதி
விடாமுயற்சி சார்ந்தது;
திறமை உழைப்புச் சேமிப்பு;
புகழே வழியஉன்னை வந்து அடையும்!
Comments
Post a Comment