வரலாறு: பேரரசர் ஹர்ஷர்.
Murugesan Ponnaiah · பின்தொடர்க 3 நா · நாளந்தா பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர் பேரரசர் ஹர்ஷர் கிபி 606 முதல் 647 லரை பேரரசர் ஹர்ஷர் ஒரு வீரர் மட்டுமல்ல, அவரே ஒரு அறிஞர் மற்றும் அறிஞர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அவர் மகா கவிஞரான பானபட்டரை அரசவைப் பண்டிதராக ஆக்கினார். ஹர்ஷர் தானே சமஸ்கிருத மொழியில் நல்ல அறிவு படைத்திருந்தார். அவர் 'ரத்னவள்ளி', 'பிரியதர்சிகா' மற்றும் 'நாகானந்தா' ஆகிய மூன்று சமஸ்கிருத நாடகங்களை எழுதினார். பிரபல வரலாற்றாசிரியர் ஈ.பி. ஹேவல் தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் ஆரியன் ரூல் இன் இந்தியா ஃப்ரம் தி எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி டெத் ஆஃப் அக்பர்' என்ற புத்தகத்தில், "பேரரசர் ஹர்ஷர் வாளைப் பயன்படுத்துவதில் எவ்வளவு திறமையானவராக இருந்தாரோ, அதே அளவு பேனாவைப் பயன்படுத்துவதிலும் வல்லவராக இருந்தார்," என எழுதியுள்ளார். ஆர்.சி. மஜும்தார் தனது 'தி கிளாசிக்கல் ஏஜ்' (The Classical Age) என்ற புத்தகத்தில், "ஹர்ஷர் ஒரு சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியை நேசிப்பவர். அவரது 'நாகானந்தா' படைப்பில், காதல், மனிதநேயம், சகோதரத்துவம், இரக்கம் ம...