மதம் வதம். > மகாட்சுமி யாராம்?

 


தீ..வாளியை தமிழன் கொண்டாடுவது!

ஓநாய்க்கு உபச்சாரம் செய்ய ஆடு அமர்த்தப்பட்டதைப் போல,பக்காத் திருடனின் பாதக்குறடுகளை சொத்தைப் பறிகொடுத்தவன் சுமப்பது போல,உதைக்கும் கழுதை காலுக்கு உதைப்பட்டவன் தங்கத்தால் லாடம் கட்டுவது போல,கொட்டும் தேளை எடுத்து முத்தமிடுவது போல,தோளில் பாய்ந்த வாளினை எடுத்து கண்களிலே செருகிக் கொள்வது போல,மனைவியை கற்பழித்தவனுக்கு மலராபிசேகம் செய்வது போல,

எந்த ஆரியம் மூடத்தனத்தை மூடி தமிழனை தீய்த்ததோ,மடைத்தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ,சனாதானத்தை புகுத்தி தமிழரின் செல்வத்தைச் சுரண்டிற்றோ அந்த ஆரியத்திற்கு புகைவேத்யமிடுவது,அவர்களின் ஆணவத்திற்கு அறிகுறியான நாட்களை கொண்டாடுவது ஈனத்தனம் என்போம்.

தீயும் வாளியும் தமிழரைக் கெடுத்தது போதும். 

தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடுவது திருந்துவார்களா?

ஆரியர் திராவிடரை வீழ்த்திய வெற்றி வெறி அப்பண்டிகை.ஆரியர் அதைக் கொண்டாடினாலும் பொருள் உண்டு.

தோற்கடிக்கப்பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிடர் அதை கொண்டாடலாமா?

கதைதான்! இருந்தாலும் ? பேரறிஞர் #அண்ணா -

தீபாவளிக்கு வாழ்த்து கேட்பவனுக்கு இதை பதிலாக போடுங்கள்.

[ அண்ணா நம்மைக் கெடுத்தவர்களுக்கு எத்தகைய பட்டங்களைத் தருகிறார் என மேலே மீண்டும் ஒரு முறை படியுங்கள் ]


மகாட்சுமி என்பது யாராம்? கதைப்படி இந்த மண்ணின் மகள்!

நரகாசுரனின் தாயம் அதனால்நம் முன்னாள் மூத்ததை பாட்டி!

மகாவிசுனு வானின் மைந்தனாம்  கீழே பன்றிஉரு மாறி அயோக்கியன்...

ஆழிஉள் புகுந்துப் பாயாய் உறங்கியபூ லட்சுமியை தூக்கி சென்றானாம்!

இராவணன் சீதையை வானவழி வந்து கடத்தி சென்றதாய் கற்பனை!

பூமிதாயை மீட்க நரகாசூரன் வந்தேறி- யோடு விசுனுவோடு போராடி மாய்ந்தான்!

சீதைமகா லட்சுமி அவதாரம் என்பது கதை! சூத்ரா! இராவணன் ஏன்சீதையை கற்பழிப்புச் செய்யவில்லையா?

பூமியில் கிடந்தவள் சீதை! கதைபடி இராவண னுக்குக் கொள்ளுப் பாட்டி! கொண்டாடுவாயோ தீபாவளி?



" தீபாவளி குறித்து பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.
அது என்னென்ன கேள்விகள்?
--
தீபாவளி என்றால் என்ன?
(புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை (நரகாசூரன்)தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமியைபற்றி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டும்?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டியது அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
( "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து...)
அசுரர் என்றாலே ஆரிய பார்ப்பனர்கள் கூற்றுப்படி திராவிடர்களே
மத்திய ஆசியாவிலிருந்து ஆடுமாடு களை ஒட்டிக்கொண்டு புல்தரைகளை தேடி இந்தியாவிற்கு பிழைப்புத் தேடிவந்த நாடற்ற நாடோடி பார்ப்பனர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு (உயர்ந்த நாகரிகத்திற்கு) சொந்தக்காரர்களான திராவிடர்களை அடிமைபடுத்திட இழிவுபடுத்திட சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வெற்றிபெற பொய் புராண கட்டுக்கதைகளை உருவாக்கி திராவிடர்களை அரக்கர்கள், அசுரர்கள் என சித்தரித்து பார்ப்பனர்களை (தேவர்களை) எதிர்த்து போரிட்ட திராவிட மன்னனான நரகாசுரன் இறந்தநாளை மகிழ்ச்சியான நாளாக (தீபாவளி) திராவிடர்களையே கொண்டாடும்படி செய்தனர்
அறிவுக்கு (அறிவியலுக்கு) பொருந்தாத நம்மை இழிவுபடுத்தும் கட்டுக்கதையை நம்பி (தீபாவளியை) நாம் கொண்டாடலாமா?
திராவிடன் இறந்த நாளை மகிழ்ச்சியான நாளாக கருதி நாம் வாழ்த்துக்களை பரிமாறலாமா?
அறிவுக்கேடு காற்றுமாசு ஒலிமாசு பொருளாதாரநட்டம். பார்பனர்களின் பன்பாட்டுப்படையெடுப்பே தீபாவளி!
சிந்திப்பீர்

பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;

இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;

உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;

புகழ் பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;

வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;

அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!


பைத்தியம்ஒன் றல்ல பலகாண்என் றாகினால்...

வைத்தியம் பார்க்க வசதி இருந்திடும்;

ஷைத்தான்முக் கோடி திரண்டுவந் தேறிநெய் 

வார்த்தசாதி தொற்று; வளைத்துஒட்டு மொத்தமத

பித்தும் பிதுக்கிவெளி யேற்று.


அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...

நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்!

பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி...

வழியினின்றும் விழிகளை விலக்கி பேதம்ஓதும்மத...

இழிவுகளை நீக்க இந்தியா தென்படும்!


Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!