காதல் வழி சாதி ஒழி!
வெல்லும்உன் தமிழொடு ! விண்ணோடு என்னோடு !
துள்ளும் சாதிகளை , காதல் சொல்லுள் நொறுக்கிடு ;
முள்உள் பேதம்தாண்டு ; முத்தம் வலுக்கொண்டு !
சொல்நாம் ஒன்றுஎன்று மதமோதல் வென்று!
கலக்கம்விடு ; இந்தக் காவிரி உனக்காக வருவாள்என்
உலகமே! இப்பெண்ணோடு நீஒன்று; ஒற்றுமை
நிலவுப் பிறைநுதல் தொடுஅழகு நேர்வகிடு
கலையஎன் இளமை நுகர்ந்து ; சாதி அநீதி விதிஅழி.
நோயி'டையே சிற்பி கோயில் நுழைவாயுள் கருவறையுள் ;
ஆயுளில் இறுதிநாள் வரைஅழகு தெரித்திட செதுக்கிட்ட
தேயாகல் பதுமைகள் மறைந்துற்ற உன்நாகர் மூதாதையர்
தாயும் சேயும் தகப்பனும் அவர்களின் பெண்ணேநான் ஆக -
ஆயாநம் முன்னோடி வாரிசுகள் உருவ படிவங்கள்தான் !
ஓயாதுஉன் முன்னோரை தேவதை தெய்வம்என கல்ஆ -
லயங்களுள் ஆரியன் ஓதும் நடனபதுமை ஓவியங்களை
நீயேசெய்பூசை வந்தேறி ஆகமவிதி சட்டம் இல்லையே!
எப்போது வானம் கதவு திறந்தது? நிலவுஎந்த இருட்டுஉள்... தப்பாது... ஒளித்தேனை சிந்தாது! இளமை மறைந்தது? அப்போது இரவு...எதனால் ஞாலம் நம்முன் மிரண்டது? இப்போது என்முன்னே கனவோ? நினைத்து நினைத்து... நிற்காது பகலிலும் புன்னகையை... அவிழ்க்கின்றது! வெண்பனி நிலவை தொட்டு உன்மேல்... விலகி படர உலாவிய ஒளியில்; கண்மணி களைநழுவி உன்னை தழுவ... கவிழ நினைக்க இமைகள்;
என்கடன் தமிழச்சி ஆவதே! உன்னால்... இன்று விழித்தேன்; தலித்காதல!
சேர்க்க... உன்னோடு என்னை; காக்க, நான்தினம்; வாழ்க்கை ஒருமுறை! மறுபடி பூக்க... வழிஇல்லை; கா...காஎன, அன்றாடம் கரைகிற இருவரது காதல்; நோக்க, அருகில்நீ இல்லைஏன் பெருகிடுது ஆவல்?
அழகியபிறை நுதலாள்என்னை அணுகி உன்பார்வை மேய ; உலகநிலைஎன் அழகுகளோ உனக்கென உண்'என்று உருள ; கலகம்செய் அச்சுஇதழ் காதல் , கச்சிதமாய் மூலையுள் அமர விலகஉன்னை இயலாது உன்ஆசை , வென்றதே சாதிமயக்கமே!
நான் எழுதிய ஓர் கவிதை !
நான்காயிரம் கோடி வரிகள் !
உன்விழிகள் சிதற தெரித்திட்ட
ஒரு சொட்டுக் கண்ணீரில் …
கரைந்திட்டனவே !
என் கவிதை உப்பா ? உன்
கண்ணீர் தப்பா ?
ஆராய நேரமில்லை !
சாதிநிற பேத வம்சங்கள் ,
நம்மைப் பிரித்திட்டனவே !
கனிதொட கொடிமொட்டு காய் ஆக பூக்க ;
பனிப்படர்
மேகநிலவு பார்த்ததை நழுவ
இனிஎன்ன தடையென ஏங்கிடும் கருவண்டு
கனிக்காக காக்கபூ கனிந்திட்டது தேனே !
உறிவாள்கள் அன்ன உறுத்திடும் கூர்விழிகள் ;
எரிவேல்கள் எனவே இருப்பக்கம் பாய ,
கொதிநீர் அன்ன குதித்திடுதே காதல் …
கதிரவன் நிலவே கருக்கிடும்முன் கா , வா !
அடிக்கடிஉன் நினைவு ஏறும்பாய் பகலிலும்
என்மேல் ஊறிக் கடிக்கின்றதே !
கடிக்கி டை என் இதயம் கரும்பாய் மாற …
நானோ துளையாகித் தவிக்கின்றேனே !
என்னைஉன் நினைவிலிருந்து
விலகிட செய்ய துடிக்கின்றே !
என் இதயத்துள்நீ சுவாசிப்பதால் ,
விடுபடவும் முடியாமல் … நொடிக்கு
நொடி மின்னல் இடியும் அன்ன ,
மடியாமல் தத்தளிக் கின்றேன்
பேதையில்லை [ நீ ], கொடியில் பிரியும்சுளை கனிந்து ,
போதைதரும் விருந்து ; பூவெனவே மலர்ந்து ,
காதல்மது சுரந்து , கற்கண்டே எழுந்து ; முத்தமிடு
மோதும் கடல்அலை கரைப்போல் விரைந்தே !
பேதையில்லை [ நீ ], கொடியில் பிரியும்சுளை கனிந்து ,
போதைதரும் விருந்து ; பூவெனவே மலர்ந்து ,
காதல்மது சுரந்து , கற்கண்டே எழுந்து ; முத்தமிடு
மோதும் கடல்அலை கரைப்போல் விரைந்தே !
ஊட்டி மலைசிகர நுனிகளை ஊடுருவி வருடிடும்பளீர் ஒளியெனவே … ஈட்டிகளாய்நீ விழிகளால் துளைக்க … எறிந்திட்ட கூர்நோக்குகள்என் பட்டிடை மேல் வழுக்கிவிழ பாசக்கனி கட்டழகிநான் உன்னை தழுவ; ஆட்டிவிட்ட பம்பரமாய் அசைந்தாடுதே காணுன்உணர்வுக் காதலே !
என்ன நினைவோநீ ஏங்கி செதுக்கிதினம்
பின்ன கனவுள் ; நான் பெண்ணானவில் என்செய்வேன் ?
மின்னும் இடிமுகில் ! திக்குஅறி சாரலே ! என்
கண்ணுள் அசையஉன்னைக் காண்பேன் !
என்னுள்நீ இருப்பதை அறியாமல்
- கனவுகளில்
கண்களை சிமிட்டிச் சிரிக்கின்றாய்
- என்
மனதில் உள்ள பாரங்களை
- நான்
உன்னுள் இறக்கிவைக்கப் பிழைப்பேன் !
வனமாய் கனவாய் வளர்ந்தாய் நெஞ்சுள் ! - உன்
நினைவு நெருப்பால் கடலுள் மூழ்கி ...
மணல்மேல் புரண்டேன் மகிழாப் புழுவாய் !
தினம்உன்னை காதல் தெய்வமாய் கண்டு ,
தனிமை தகிக்க பிரிவதோ அன்பு ?
பூமிக்குள் புழுக்கம் புகுந்தால் என்ன ஆகும் ? பூகம்பம் நிகழும்! டி , சுனாமி சீறிவரும் பூமி பிளவுறும் மேடு தாழும் ; பள்ளமும் ஆகும்! பள்ளத்து நீர்நிலைகளில் வரத்து உயரும்! பெண்டிருள் பிடிவாதம் புகுந்திடால்... என்ன நிகழும் ? சலிப்பு வரும் ; வருத்தம் வரும் ; அன்பிலே பிளவு உண்டாகும் சண்டைகளும் நிகழும்! குடும்பம் பிரிவுரும்! பிாவுத் துன்பம் உட்புகுமானால் நற்பண்புகள் சிதையும் மறையும் இந்நிலை பெருகுமானால் மானுடத்துள் ஒழுக்கம் கெடுக்கும்!
பலாச்சுளை தேன்சொட்டும் காண் நிலமே!
உலாப் போகும் நிலா சிரிக்கு வான வனமே!
செலாப் பணமோ கவிதை பாடும் என்களமே ?
கலா காணுமோ நினைவு நழுவானம் காதலே!
போகின்றாய் நான்உன்னைத் தினமும்
காண முடியாதபடி தூரத்தில் திரிகின்றாய்
நோகின்றேன் மனம் தவிக்க காதலில்
உன்னை நினைத்தே தினம் சாகின்றேன்!
மரிக்கவா ? சூத்திர சாதிவிலகி உன்னைக் காதலிக்கின்றேன்! விரைந்துப் பறந்து அங்குவந்து திரும்பவும் உன்னை அடையவே ஆசை கொண்டேன்! ஏக்கமாய் நோக்காதே! கனவுள் என்றன் தூக்கத்தை இரவுவர தினம் தீய்க்காதே! காக்க உன்னை வைப்பேனோ ? - என்னை வீக்கமாய் ஆக்காதே! காதல் வெறியனே!
இறைவாநீ இல்லவே இல்லையோ... ஏன் ? புழு ஒன்று புகுந்தது! கண்டு பூ ஒன்று அதிர்ந்தது! கொடி
அழுகிக் கனிந்தது! ஆசை முழுவதுமாய் அழிந்தது! விளைவு ஏக்கம் என்றன் காதலனை கொன்றது கழுகு என்றுஓர் கல்யாணம் வந்திட்டது! சந்தேகம் ஓர்ஆண்மகனை தின்றித்தது! காயாய் கருஒன்று உருஆயிற்று! மெதுவாய் பழுதாகிக் கனிந்தது! பதர் விதை பாறை ஒன்றின்மேல் விழுந்து வென்றது! தழும்பு ஒன்று தவிக்கின்றது - தன் காதலனை எண்ணிநாளும் துடிக்கின்றது! மரம்அன்ன எழும்பாகி உளுத்திட்டது! அந்த சதைஎங்கு சென்றிட்டது வெறும் கதையாகி பூமியுள் புழுவாக மாறி புதைந்திட்டது!
காதல் வளைத் தளத்துள்ளே ; கவிதைக் கருசிரிக்கும் நிலத்திலே ; மது அலைபாயும் சுரங்கமே ! இணைக்கும் மகரந்த அரங்கமே ! வளர்ந்த கொடியின் அசைவிலே , கனியபூ இதழ்கள் விரியவே , விதை எழிலும் ஒளிர சிமிட்டவே , நீ முயங்கும் துருவத்துள் ! எதைக்கண்டு நான் மயங்கினேன் ? உன்னைஈந்து என் மனத்துள்ளே ! இணை அன்பு வனத்துள்ளே ! உன்றன் தவிப்பின் வெடிப்புள்ளே புதிய காவியம் நடக்கவே வா ?
சிறிய கையளவு கணனிஉள்ளே தெரிக்கும் உன் அழகு க்ண்டு விழுந்தேன் ; விழுந்து எழுந்தேன் மீண்டும் விழுந்தேன் இணைய வளைத் தளம்வழி என்னை அமிழ்த்தும் - உன்றன் காதல் தளம் விட்டு மீள இயலாமல் அழகே ! மெல்லப் புதைந்தேன் !
எப்போது விடியும் என்று உறங்கியது ,
இரவுகளில் தத்தளிக்கும் கிழமே போல் ...
எப்போதும் விடியதோ என்று - இமை
துஞ்சாது ஏங்கும் என் பாசப் பழமே !
இப்போது தப்பவிடு கனவிலும் தோன்றாதே !
என்னை ஓர் விவரமறியா மழலையாக !
எண்ணு என்றன்உயிர் பிழைக்கட்டும் !
அறிவாயோ அக்குப் பஞ்சர் மருத்துவம்? நடைமுறை
தெரிந்திடாது சிக்கல் இருந்திடுமோ என்றுச் சிந்திக்க தே!
சிரிப் பூ இதழ்கள் உண்ணும்முனிப்பில் நீஆசை
பரிமீ(து)ஏறி என்னைஉன் பார்வையால் கொணர
கரிசீர் இருகொம் பால்உடன் குத்திடுவேன்!
சிரிக்காதே ; கவிழ்ந்திடுவாய் விடமாட்டேன் உன்னை
விரிவழி வாளாலும் தாக்குவேன் விழிக்காதே...
சரியாகிடுமே எண்ணோயும் சமரசம் காண்போமே வா!
கோ , ' இடை ' விலகிட்டதும்என் குளிர்ந்தஉடல் வருடஉன்னை
வாடைக் காற்றே! வரச்சொன்னது யாரோ ?
ஊடா தென்றலைநான் உறவுகொண்டு இணைந்திடவே
ஓடும்என் தனிமையே ; உறங்கிடும்என் இதயமே!
நாணத்தான் உன்னைக் கண்டித்ததும் நங்கை நாந்தினம் ,
காணத்தான் உனக்காகவே உருகிடும் கன்னியும்நான்!
வானவழிப் போகும் வாடும் மேகம் அன்ன தாகத்தால்
தேனுள்ஒளிச் சிதற லைச்செய்திடும் நிலாஆகஎன்னைப்
பேணும் தமிழேஇப் பெண்ணுள் புன்னகைக்க சங்கமியே!
திமிரக் கவிழ்வேன் திகைக்க சுழல்வேன் !
நிமிர மலர்வேன் நீநீந்த அமிழ்வேன் !
அமிழ்த சுனையுள்உன் ஆசைகள் முகிழ்ந்திட
உமிழ்ந்தால் அதிலும் உருள்வேன் காதலா !
திறக்கும் உதடுகளுள் திகைக்கும் இனிப்பே ?
தெரிக்கும் மதுஉண்டு சிலிர்க்கும் மலரே ?
விரிக்க இமைகள் விழிசிமிட்டும் அழைப்பே ?
சிரிக்கநீ உதிர்க்கும் சித்திரம் முத்திரைதே !
காதலிநான் உனக்குத்தான் என்றாய்நான் காதலித்தேன் !
காதலொடு நாவற் கனிவிழியாளை மட்டும் நேசிக்கும்
காதலியாய் ஆகினேன் ! காமுகனாய்நீ என்னை விலகிவேறு
மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள் மயங்கிடு நாளுமே !
அண்டுநீ என்றே அசையும்ஓர் கொடிமலர் அதோ கருத்த
வண்டை நோக்கி மயங்கிதன் இதழ்களை விரிக்கஅதை
கண்டு இமைஅசைத்து என்னுள் காதலி முகிழ்என்று
சுண்டியிழுத் திடுதேஏன் தூதுவிடும்என் பார்வையே !
தேடித் தேடி என்னைநீ தீண்டுகின்ற இரவெல்லாம் ,
ஆடிப்பாடி மகிந்திடுஉன் ஆசைஅசையும் வயல்உள்ளே !
ஊடிடாத படிஎன்னை நீநாளும் ஓடிவந்து கூடினால் ,
வாடிடு மோநிலவு வானுள்ளே ? கனியுமே முகிழ் மாரியே !
விண்ணும் நிலவுமென மின்னும்இடிமாரி அன்ன
கண்ணும் கலந்து விடஇக் கவிதைக் காரிகைதொட
அண்டும் தினவுகளும் அழைக்கும்உன் உணர்வுகளும்
முன்னும்இப் பெண்இமைகள் பின்னும் தான்உறங்குமே !
குடைவிரி நிழலே ! குழம்பாதே என்னை இறுக்கிடு தடையோ , சத்தமோ , செய்திடாது முத்தமிடு அறிவி ! மடைத்திறந்த உன்அன்பில் மகிழ்ச்சிக்கு ஈடுநானே ! நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில் பூத்திட்ட வஞ்சிநான் - பள்ளி காணவும்உன் கவிதைஏடென நீபடிக்க... மெளனமாய் கேட்கவும் மகிழ்ந்திடும் காதலி
மாரியோடு மயில்களும் மயங்கிட ஆடும் முகில்களாய்
சாரலோடு இடிஇறங்கிட தாவிமறையும் மின்னலே ! பால்
சோறுஊட்டி மழலையை தூங்கச்செய்யும் தாயென
துரிஆட்ட என்னைநீ தூதுவிட்டேன் அழகுநிலவையே !
ஏடுதொட்டு கவிதைப்பாடி என்னுள்இசைக்கும் காதலா ! கண்
சாடைகண்டு என்னைநீ சரிப்படுத்திட வேண்டுமே !
ஊடல்காட்டி சிறுமியோ ? ஒருக்களித்துப் படுக்கநீ
ஆடிட்டது என்றன் அங்கமே ! அகன்றிட்டது உறக்கமே !
தினமும் உன்னை நினைத்து துருவப் பனிமலை ஆகினேன் ! என்னைப்
பார்க்கநீ முற்பட்டால் உருகி நதியாகிடுவேன் ! என்னோடு பழகும் நிலைமை உருவானால் கூடு துறை யாகிடுவோம் ! என்னைநீ மீண்டும் பிரிய முடிவெடுத்தால் அதில் ஆவியாகி மேலே போவேன் ! என்னை இணைய நினைத்து மணந்தால் மழையாகி பூமியில் குதிப்பேன் !
காட்டுக்குள்ளே காணும் மேடு மேலே பாட்டு வரவில்லை பாடு மூங்கில் குயிலே ! சேற்றுக்குள்ளே சிணுங்கும் வயல்தான்அன்ன ஆற்றுக்குள்ளே ஆசையை வைத்தேன கடியேன் என்றன் அழகுக் கயலே ! ஏட்டுக்குள்ளே ஏதோ கிறுக்கும் சின்னப்பையனை தோட்டத்திலே துள்ளும் மானே அன்ன விளையாடும் என்றன் சீட்டுக்குள்ளே அழகிய காதல் ராணியைக் கண்டு போட்டேனே நான்ராசா நீ போடணுமே ஏசா !
Willswords Tamil Twinkles: சிவனாக ஆகி வா! அய்யன் கதைப்படி என்னை கற்பழி!: https://willsindiastamil.blogspot.com/2016/02/blog-post.html
Comments
Post a Comment