அழகுப் பொழிவு


mfpyKk; mire;J efuf; fz;Nld;

Mfh aj;jpy; epyitf; fz;Nld;

,izajsk; ,aq;Fk; fzdp  fz;Nld;

<VJk; nkha;ah jkpo;Njd; fz;Nld;

 

czh;Tfs;  ca;Ak; vopyplk; fz;Nld;

CUk; Neuk; Xlf;; fz;Nld;

vl;Lk; xl;Lk; ,irtsk; fz;Nld;

VNdh ,uTk; neopaf; fz;Nld;

 

xspGf tpbay; tpopf;ff; fz;Nld;

Xirapd; Ml;rp Xq;ff; fz;Nld;

Xsitapd; rphpg;gha; fjputd; ntspg;gl

/-Ma; gdpj; Jsp moiff; fhl;LNj!   

 Labels: அழியா அன்பு வரைப்படமே! மடங்காபூ இதழ்களுள்...

குடிமது என்றே வனகொடிப் பூஒன்று அழைக்க

கடிவண்டு இதழ்கள் கடிக்கின்றதுக் கண்டுஅக் 

கொடி அன்ன நினைத்தாயோ அவ்வன​ கொடிப்பூ

கடிவண்டென குதறலாமோ என்னை உன்வழிகள்!


வடிவில் தாமரை நிறம்வெட்கும் முகமோமோக,
மடியுள் தொடர்ந்து மயஙகிவருடிடும் சுகமோ?
இடையில் முகிழ்அசைவில் தாரகையர் சூழ்ந்திட
குடைவிரி நிலவோ குழம்பாதே என்னை அடை!(நான்)
தடையோசத்தமோசெய்திடாது முத்தமிட
மகிழும் ஒர்அன்னையின் பூரிப்போஎன் நிலையே!


தொடரும் தாரகைத் தோழியர்                                                                          

கண்சிமிட்டி உன்போல்

தொடுதல்படுதல் தவிர்க்க...

இடையில் சிறுமழலை முத்தமிட,

ஏதும்தடை செய்யாதுமகிழும்ஓர்

அன்னையின் பூரிப்பு எனக்குள் ஏன்?


கொடியில் பூமொட்டு மலர என்நினைவில்
குளிர்ந்திட்டது உன்முகம்ஏன்?
துடித்திடும சோலைச் சுனையுள்கயல்
துள்ளிக் கடித்திடும் சுகம்,ஏன்?

படப்படத்து முகில்திரையுள் வெட்கும்
நிலவு படும்பாடு... அறிந்திடு!
உடன் வாயேன் தேயாது தேயும் துயரம்;
உன்னால் நீங்கும்!

நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்                                                                      


பூத்திட்ட வஞ்சிநான்  பள்ளி காணவும்உன் 

கவிதைஏடென என்முன்நீ படி,வா; படிக்க...
மெளனமாய்
 கேட்கவும் மகிழ்ந்திடும் காதலிநான்


சிவ்' என்றே கமலப்பூ, சிவந்திருக்க                      கருங்குவளை மலர்கள்கண்டு,
மெளனத்தை,
 கருவண்டு ஒன்று;
விலகிக்
 களித்(து)யிசை, சிதறிட்டதே!
                                                                                                               

 செவ்வல்லிப் கொடியாள்,சிரிக்க

 முல்லை மொட்டு பற்சரம் ஒளிர

கவ்' என்றே காதல்போதை என்னை,  

உன்மேல், தாவ தூண்டிடுதே!



(செவ்வல்லி மலா, 'வாய்'க்கு, சொல்லப்பட்ட
உவமை;
 கமல மலர், முகத்துக்கு சொலப்பட்ட
உவமை;
 கருங்குவளை, கண்களுக்குச்
சொல்லப்பட்ட
 உவமை)


தீண்டிஉன்​னை பார்​வையினால் தீய்க்கின்ற மாது!(நான்),

பாண்டியனின் சின்னம்இரண்​டைப் பாயவிடும் ​போது;

​வேழம் ம​லை​யோன் வில்அம்பாய் ​வெல்புருவத்​தோடு,

​சோழன்உன் ​கொடிச்சின்னம் ​தோற்​றோடும் காடு!

 

[பாண்டியனின் சின்னம்     - மீன்  (கண்களுக்கு உவ​மையாக

                                 சொல்லப்பட்டுள்ளது)

வேழம் ம​லை​யோன்          -  ​சேரன்

​சோழன் ​கொடிச்சின்னம்   -   புலி]

 

அத்தான்நீ ஆ​சை​கொள்ள​ ஆ​காநான் காதலிக்க

பித்த​னேநீ தழுவி  பிரியாமல் முத்தாட

நீர்ம​றைவில் ஆடிப்பின் நின்று க​ளைப்பாற

தாம​ரை​மேல் தாவின​வே மீன்கள்!

 

தாம​ரை  -  முகத்துக்கு’ உவ​மையாக 

            சொல்லப்  பட்டுள்ளது.

மீன்கள்  -   கண்கள்.

 

தாம​ரை மலர்கள் மீது தா ‘மது’ என்​றே ​சென்று,

ஆ!ம​றைவு ஏதுமின்றி அமர்ந்திடு​மே வண்டுகள்அன்ன

ஓ!கு​றைஏதும்இன்றி உயர்ந்திட்ட காம்புகள்கண்டாய்

தீய​றைஎரி விறகுகள்அன்ன சிக்குண்​டாய் தீய்ந்தாய்நீ

 

கொள்ளை நிகழாத குவலைமலர் மங்கைநான்
துள்ளி நடந்து துவளாது பாசத்தினால்
கள்ளமாய் ஏதும் இன்றி காதல் கனி
எள்ளிவிலக லாமோ? ஏங்கிடுமே உன்இளமை

 

உணர்வு நரம்புகளோ உறங்க மறுத்தலால்
கனவு நடுவிலே காதல் சிரித்தலால்
தினமும் உன்நினைவோ தீய்க்கும் நெருப்பாம்
நனவில்நீ தழுவு நழுவும்நம் தனிமையே!

 

பூத்தேடும் வண்டே! புன்னகையோடுமா ஆடும்…

*தீகோடு தாண்டுதேன்பண்டம் கண்டு-உன்

பா’க்காடும்மொட்டு மகரந்தத்துள் உருண்டு-என்

நாக்காட தமிழ்பாடும் நாயகனை வரச்சொல்!


*திருச்​​செங்கோடு

 

சித்தரித்தான் சித்திரமாய் சிறைஎடுத்தான் என்னுள்அன்பு-

தத்தளிக்க குண்டுமல்லி கொடியிடையில் பூப்பிளக்க…

பித்தளித்தாய் தவிக்கவிட்டாய் பேச்சிழக்க நித்தமும்என்னை;

பைத்தியமாய் காதலைநான் பார்ப்பதற்கோ விட்டகன்றான்?

 

சித்திரையாவைகாசியா மார்கழி புரட்டாசியா?

ஐப்பசியா கார்த்திகையா ஆனிஆடி ஆவணியா?

பங்குனியாதைமாசியா பன்னிரெண்டு மாதங்களில்;

எந்தமாதம் இன்புறஎன் தலித்காதலன்வருவானோ?

 

தட்சணைமேல் ஆசையோ? தங்கநகைமோகமோ?-உன்

மச்சினிபோல் ஒருத்திவந்து மயக்கமது’ தந்திட்டாளோ?

கத்தரித்தாய்! தினமும்ஏன் ஏங்கவிட்டாய் இராப்பகலாய்?

கத்தரிக்காய் ​​கொஞ்சலுக்கா காத்திருந்தேன்செப்புநெஞ்சே!


ணையுடைந்தவெள்ளமா? லைஎழுப்பும் ஆழியா?

னைமரத்தில் கசிந்தகள்ளை பருகஊறிடும்போதையா?

பசிஎடுக்க இறைநோக்கி பாய்ந்திடும் வனவேங்கையா?

உருசிகொடுக்க ஒழுகிகிடும் என்தேன்கூடு காதல்தாபமே!

 

பண்ணையா? ​தெற்கு பார்த்துநிமிர்ந்திருக்கும்…

புன்னையா? புன்னை சூழ பூத்தழைக்கும்…

தென்னையா?​ செப்பு ஒளிசிதறும் இரவுநிலா-

பெண்ணாய் என்னைஏன் தடவுகிறாய்தென்றலே?

 

கூடுத் துறைகண்டேன்; குடையும் மதுவண்டு-

தேடும் வயல்கண்டேன்; திரண்ட கனிகொடியில்-

ஆடும் இலைகண்டேன்; அரவுப்பாற் கடல்அசைய…

ஓடுபடகில் நதிஅழகில் ஊடுசுகம் கனவானதே!

 

ஊறும் கிணறாகி; ஓடிவரும் ஆறாகி;

ஆறும் பாலாகி; அருந்திடும்மோராகி;

ஏறும் எறும்பாகி;  தீயாகநெய்உண்ண

சேரும் நாளெண்ணி தினமுறுகிடுதேநெஞ்சு

 

அணிமணி துணிஎன ஆவலொடு அணுதினமே
கனிஉ(ண்)ணும் அணில்அன்ன கனிகொடி மேல்ஊறும்
மின்மினி மினிமினி எனஎன்னை சுற்றுதுஉன் காதலே!
பிணிபசி பி(ன்)னித்தணி நிலவுகண்டு படுபனி ஒளியே!

இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன
சிலைவடி சிந்தனையுள் சிற்பிஉளி அசைவுஅன்ன
அலைகடல் நுரையாய் ஆசைபிளா நிலாநோக்குதே
துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!

வாங்கும்என நீர்சுழலால் வருடும்நதி பூவனமே
தாங்கும் எனப்பரவி தழுவும்உயிர் மகரந்தமே
தூங்கிடு எனசென்றான் துவண்டிடுமோ சுவாசமே
ஏங்கிட செய்அவனை என்உறங்கா காதல்நிலவே!

 

 காதலிகாதலிஎன்றாய்உன் காதலி  நான்ஆகினேன்!

காதலொடு நாவற் கனிவிழியாளை நீமட்டும் ​நேசிக்கும்

காதலியாய் நான்இருக்க காமுகனாய் என்னைவிலகி ​வேறு

மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள்நீ மயங்கிடுகையிலே!

 

அண்டு என்றே இதயத்துள் சைகள் ​தேங்கிட்டதே

வண்டொன்றை ழைக்கும் பூஇதழ்கள் சிறைப்பட்டதே

 

அண்டுநீ அண்டுஎன்றே அசையும்ஓர் ​கொடிமலர்கரு 

வண்டை ​நோக்கி  மயங்கியிதழ் ​நெழிப்பதுபோல்

கண்டுஉன்னைத் ​முத்தமிட்டு காதலி முகிழ்என்று

சுண்டியிழுத்  திடுதேஏன்  தூதுவிட்டஎன்  பார்வையே!

 

குடிமது என்றே வனகொடிப் பூஒன்று அழைக்க

கடிவண்டு இதழ்கள் கடிக்கின்றதுக் கண்டுஅக் 

கொடி அன்ன நினைத்தாயோ அவ்வன​ கொடிப்பூ

கடிவண்டென குதறலாமோ என்னை உன்வழிகள்!

 

வாங்கும்என  அவனுக்கு வழங்கிபின் வாங்கிடும் தண்அதரங்க​ளே!

தாங்கும்என பாய்ந்துஅவன் தழுவிட  தயாராகிடும் ​பெண்​நெஞ்​சே!

ஏங்கிடு எனஅவன் என்​னைநோக்க ​நான்நோக்க ஏங்கிடும் விழிக​ளே!

ஏங்கவிட்டு அவன்உயி​ரை விலகி எங்​கே​சென்றான் என்உறவுக​ளே!

 

கொல்லி ம​லைச்​சென்று ​கொணர்ந்திட்ட ​தே​னோ?

அல்லி மலர்சிரிப்​போ அழ​கோ – ​வெல்ல​மே!

மல்லி ​கைப்பூ ஈனும் மணம்கமழும் கா​​ய​ணோ?

மில்லிஒரு நூறில் மிதக்கின்ற கற்ப​னை சுவர்க​மோநீ!

 

கன்னி யிதழ்கள் நீர்உண்ணும் கரும்பு வடிக்கும் சாறு!

​பொன்னித் தமிழ்வளநாடு புகுந்து புரண்டு வரும்ஆறு!

பின்னி விழிது​ணை​யோடு ​பேசும் ​மொழிநூறு! அதுஎப்​போது?

விண்உள்நீ என்​னோடு ​மேகம்​மீது படுத்து முயங்க  அப்​போது!

 

அன்புப் பண்பாட்டுள் தாலிஅடி​மை அ​டையாளம் எனக் கண்டு விலகி

என்னுள்நீ  மானுடனாய் சங்கமித்து இல்வாழ்க்​கைத் து​ணைவி யாக்கிட்டதால்

விண்​தொட்டு ​ஏறிற்​ற​தே ஆ​சை  அதனால்  ​வெற்றி​லை தா​னேவிரியப் பாக்கு

உண்​ணென்று தந்திட்​டேன் உரி​மையுடன் சிவக்கும் சுண்ணாம்பு ​அறி​யேன்!

 

நாணத்தால் உன்​னைக் கண்டிட்டதும் ​நடனமாடிடும் மயில்நான்!

காணத்தான்  தினமும் உனக்காக​வே  கவி​தைபாடும்  குயில்நான்!

வானத்​தை ​​நோக்கிடும் ​மேகத்​தைஉன் மயக்கத்தில் வருடிடும் நிலவுஉன்​னைப்!

​பேணத்தான் ​பிறந்தது​தேனாய்! உன்தமிழ் சந்தமாய் சுழற்றிவிடு என்காத​​லே!

 

மாரி​யோடு மயில்களும் மயங்கிட ஆடும் ​முகில்களாய்

சார​லோடு இடிஇறங்கிட தாவிம​றையும் மின்ன​லே!பால்

​சோறுஊட்டி  மழ​லை​யை தூங்கச்​செய்யும் தா​யென

துாரிஆட்ட அவ​னைநான்: தூதுவிட்​டேன் நில​வை​யே!

 

ஏடு​நோக்கி கவி​தைப்பாடி இ​சையில் ஆடிடும் ரசிக​னே!கண்

சா​​டைகண்டு  என்​னைநீ சரிப்படுத்திட ​வேண்டு​மே

ஊடல்காட்டிஓர்கன்னி​போல்  ஒருக்களித்துப் படுக்கநீ

ஆடிட்டதுஎன் அங்க​மே! ஓடிட்டது உறக்க​மே!

 

 

என்னுள்நீ இருப்பதை அறியாமல் - கனவுகளில்

கண்களை சிமிட்டிச் சிரிக்கின்றாய் - என்

மனதில் உள்ள பாரங்களை - நான்

உன்னுள் இறக்கிவைக்கப் பிழைப்பேன்!!

 

வனமாய் கனவாய் வளர்ந்தாய் நெஞ்சுள்! - உன்

நினைவு நெருப்பால் கடலுள் மூழ்கி...

மணல்மேல் புரண்டேன் மகிழாப் புழுவாய்!                    

தினம்உன்னை காதல் தெய்வமாய் கண்டு,

தனிமை தகிக்க பிரிவதோ அன்பு?

 

பேதையில்லை[நீ], கொடியில் பிரியும்சுளை கனிந்து,

போதைதரும் விருந்து; பூவெனவே மலர்ந்து,

காதல்மது சுரந்து, கற்கண்டே எழுந்து;

மோதும்கடல் அலைகரைப்போல் முத்தமிடு விரைந்தே!

 

நாணும்மான் விழிஅன்ன நடனம் ஆடிடும் மயில்ஒன்று எதை,
காணும் தவிப்பில் நதியோரம் கவலைப்பட்டு புரள்கின்றது? - தன்
துணையை அடைய துவள்கின்றது? முகில்வர வாடுகின்றது?
தினமும் என்னைக்காண நீவர, தேய தேன்நிலவும் தவிக்கின்றது!

உயிரே உணர்வேநீ அருகேவா என்றால்நான், காதல்
புயலாய்மாறி உன்னைத் தழுவிட புறப்படுவேன்! என்றன்;
உடலுள் அன்பை... நீ, தை; தைத்திட்டால், நம்நரம்புக்
கடலுள் பேதக்கரிப்பு ஓடாதே! ஆசை கயலோ நீந்தும் நனவிலே!

ஈதல் நினைவுக்குள் ஈரஇசை விளைய உணர்வை விதையேன்!
காதல்கொடிப் பூமணந்து கனிகளை தேன்சொட்ட வழங்கிடுமே!
தினமும் கரங்கள் தீண்டஉன் தேகஏக்கங்கள் தீர பகற்பொழுது
கனவுஉடன் களைந்திடுமே நம்கண்கள் மாறிமாறி முத்தமிடுமே!


திரைமுகில் உரையுள், அரைகுறைப் பிறைஅன்ன என்னைநீ
சிறைகொள் ளாவிடில்உன் தேக(ம்)எடை குறைந்திடுமே!
தரைத்தொட்டுத் தடவிஉருள் புள்வெளிப் பனித்துளிஅன்ன காதல்;
உரையுமோ தழுவ? உணர்வுச் சூட்டில் கரையுமோ பாய?
நிறையுமோ உள்ளம்? நீயே பறையேன் மறையுமோ ஆசையே?


ஊட்டி மலைசிகர நுனிகளை ஊடுருவி வருடும்பளீர் ஒளியெனவே

ஈட்டிகளாய்நீ விழிகளால் துளைக்கஎறிந்திட்டகூர்

நோக்குகள்என்,
பட்டிடைமேல் வழுக்கிவிழ பாசக்கனி கட்டழகிநான்

உன்னைத்தழுவ;
ஆட்டிவிட்ட பம்பரமாய்  ​​சைந்தாடு​​தே உன்காதல்

உணர்வுகளே!


கனியாய் பூகனிய தழுவுக் கொம்பை காதலிக்கும் கொடியே!
பனியோ உருண்டு படிந்திட்டதே,  புள்வெளி எழில்மேல்;
பிணியாய் என்னை விலகாது பின்தொடர்ந்திடும் என்நிலவே!
அணிமுகிலைநீ அகற்றஎன்பூ இதழ்கள் நகைக்கின் றனஏன்?

 

இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன
சிலைவடி சிந்தனையுள் சிற்பிஉளி அசைவுஅன்ன
அலைகடல் நுரையாய் ஆசைபிளா நிலாநோக்குதே
துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!

வாங்கும்என நீர்சுழலால் வருடும்நதி பூவனமே
தாங்கும் எனப்பரவி தழுவும்உயிர் மகரந்தமே
தூங்கிடு எனசென்றான் துவண்டிடுமோ சுவாசமே
ஏங்கிட செய்அவனை என்உறங்கா காதல்நிலவே!

 

தொட்டாலோ மெய்சிலிர்க்கும்; தொட்டுஅ விழஆசை,
திட்டாலோ பண்உதிர்க்கும்; தென்றல் கனியிதழ்தேன்,
சொட்டால்உன் வாய்மணக்கும்; சொக்கிமகிழ நீதாலி...
கட்டாமல் நான்மணந்தால் காதல்!

அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான்
மெல்லிய பூங்கரத்தால் மேனியை மாலையாக்கி
முல்லைச் சரவாயால் முத்தமிட காண்பேன்என்
மல்லிகைக்குள் உன்னால் மணம்!

கொள்ளை நிகழாத குவலைமலர் மங்கைநான்
துள்ளி நடந்து துவளாது பாசத்தினால்
கள்ளமாய் ஏதும் இன்றி காதல் கனியவர...
எள்ளிவிலக லாமோ? ஏங்கிடுமே உன்இளமை!

உணர்வு நரம்புகளோ உறங்க மறுத்தலால்
கனவு நடுவிலே காதல் சிரித்தலால்
தினமும் உன்நினைவோ தீய்க்கும் நெருப்பாம்
நனவில்நீ தழுவு நழுவும்நம் தனிமையே!

அணிமணி துணிஎன ஆவலொடு அணுதினமே
கனிஉ(ண்)ணும் அணில்அன்ன கனிகொடி மேல்ஊறும்
மின்மினி மினிமினி எனஎன்னை சுற்றுதுஉன் காதலே!
பிணிபசி பி(ன்)னித்தணி நிலவுகண்டு படுபனி ஒளியே!


விழுவன வானம் சிதறும்
கண்ணீர்த் துளிகளா?
ஒரு மானுடப் பெண்ணின்                                                                     அயராத் 
                அயரா... 
துயர் மழை!


என் சோலார் குடும்பத்து

நிலா ஒளிச் சுழலே!

சூரியனில் இருந்து...

அவ்வப்போது வெளிப்படும்,

காந்தப் புயலால்... ஒளி,

பிரகாசமாகி அதிவேகமாக -

பூமியைநோக்கிப்

புறப்படுகிறதாம்!

 

என்றாலும்,

உன் இதயத்திலிருந்து

சுரக்கும், நம் காதல்

ஒளிப் பிரவாகம் முன்...

சூரிய காந்த ஒளி வெள்ளம்,

வலிய தனை இழந்துவிடும்!

 

 

சூரிய காந்தப் புயலால்,

செயற்கைக் கோள்,

விமானப் போக்குவரத்து,

மின்சாரம்,

பாதிக்கப்படலாம் என்று,

விஞ்ஞானிகளால்

அஞ்சப்படுகிறதாம்!


விடை அறியப்படாத

நம் காதல் -

பருவகால நிலவரம்...

மோசமாக எச்சரிக்கின்றது!

இளமை, குளுமை,

வளமை, ஆயுள் நிலைமை...                                             பாதிக்கப்படக் கூடும்!

 பாதிக்கப்படக் கூடும்!

 

சூரிய காந்தப் புயலால்

பூமிக்கு -

எந்தவோர் ஆபத்தும்,

இதுவரை -

நிகழ்ந்திடவில்லை!

 

ஆனால் நம்

காதலுக்குள் வீசும்...

மதம், வகுப்பு

 

வேற்றுமைப் புயல்,

நாடுவிட்டு -

கடக்கவில்லை யானால்...

உன்னைச் சேராமலேயே,

நான் இறந்துபடுவேனே!

 

 

ஒளியின் வேகமோ...

நிமிடத்திற்கு,

ஒரு லட்சத்து

எண்பத் தாராயிரத்து

இருநூற்று

எண்பத்து ரெண்டு புள்ளி

முன்னூற்று

தொன்னூற்றேழு

                 (1,86,282.397)

மைல்களாம்!

 

அம்ம...!

என்னை ஊடுருவி

நோக்கும் உன்றன்

பார்வையின்

பாய்ச்சலோ -

பாய்ச்சலின் வேகமோ...


அது,  அறிவியல் -

ஒளிவேகக்

கருவி கொண்டும்,

அளந்து...  நிர்ணயிக்க இயலாது!


ஒரு அனுமானமே!

பல நூறாயிரம்

ஒளி ஆண்டுகள்!

(ஒரு ஒளி ஆண்டு

பல நூறாயிரம் - 5.88

மில்லியன் மில்லியன்

மைல்களாம்???)

 

என் -

காதல் புவனமே!

 

உலகம்...

உருண்டையானதுதான்

உன்னை -

சந்தித்த பிறகே...

அதில் எனக்கு

நம்பிக்கை வந்தது!

நானும்... நிலா ஆனேன்!

  

நீயோ...

 

பூமியாகவே மாறி

என்னை -

சுழலச் செய்கிறாய்!

உன்னை -

சுழற்றி மகிழ்கின்றாய்!

 

என் -

சுழலும் பூமியின், ஓசோன் படலமே!

இங்கே -

ஏப்ரல்-மே சூரியனின்... அல்ட்ராவயலட்

பூமி உயிர்களை,

பயிர்களை, வயல்களை,

சுற்றி எரிக்கும் முனைப்பில்...

எரிமலை ஆறுபோல் பாய...

 

நீயோ -

உன் உலகமாக என்னைக்

காப்பாற்ற முற்படாமல்,

காற்று  மண்டலத்தைத்

தொற்றிக்கொண்டு...

அங்கிருந்து நோக்குகின்றாயே! 

         

கார்பண்டை  ஆக்சைடே போல்

பாரத, பேத மனநோய்  

நம்மைப் பிரித்து ஒன்றலுக்கு 

தடையாய் ஊறு செய்கின்றதோ? 


அங்கமே தென்றல், வரும் திசை... எதுவென்று தெரிவிக்கும்

ஆனமோ மீட்டர்...  உன் கண்கள்  என்னைத் தீண்ட  தொடும்

திக்கை அறிவிக்க வேண்டுமே!

  

காற்றின் அழுத்தத்தை கணக்கிடும்  பாரோ மீட்டரும்

ஆவல் கொள்ளும் உன்  நெருக்கத்தின் இருக்கத்தை  

நான் அளந்தறிய உதவுமோ இயற்கைச் சூழலின்

வெப்பத்தின் தன்மையை வெளிப்படுத்தும்  கலோரி

மீட்டர்...   உன் கோப, தாப  அனலை  கணிக்க, தணிக்க

பயன்படுமோ?   

 

வளையா வானமே வானவில் -  வயலட்  இண்டிகோ  

நீலம் பச்சை  மஞ்சள்  ஆரஞ்சு  சிவப்பு - என்று  ஏழு

நிறங்களையும் - தன்னுள் கொண்டுள்ளது

கார்முகிலே!   நான்வர்ணதாசன் அல்ல

நீ மழையைப் பொழிய... தோன்றபொழியாத

போது, பச்சோந்தியே போல்... இல்லாமல் மறைய!  

 

மேகமே உனக்கு -  நானே 'சிரபுஞ்சி'!  என்னை விட்டு  

விலகாதே  உலகில்  அதிக அளவில்,  மழைப் பெய்யும்

பகுதி -  இனி... 'சிரபுஞ்சி' அல்ல என் பெயர்தான்...  

கின்னசில் -  இடம்பெற வேண்டும்!

உன் மழையை -  என் இதயத்தில்...  தாராளமாய்...  பொழிவி!

 

என் முகம் நோக்கும் -  விண்ணிலவே கதிரவன்  தன்

வட்ட பாதைக்குள்  நொடி ஒன்றுக்கு  இருநூற்று

அய்ம்பது  கிலோ மீட்டர் வேகத்தில் சுழல்கின்றானாம்!  

முழுமதியாய் உன்னை -  காணும் இரவெல்லாம்  

எத்தனை மைல்கள்  வேகமென்று தெரியாமலே...  

என்னை நானும்  சுழற்றுகின்றேனே!   

 

என் கவிதைச்  சுரங்கமே!  மேகங்களின் -  மோதல்களில்  

மின்னல் விரிந்தது!  உன் விழிகளின்  தேடல்களில்  

என் சன்னல் திறந்தது!    

 

நிலவின் ஒளியே மின்னலுக்குள்  உள்ளதாம் மின்சாரம்!  

உன்னில் இருந்தோ விண் சாரமே...  உணரப்படுகின்றதே!    

 

பிரபஞ்ச... கரு மையமே!  மின்னற்  கொடியேபோல் 

நீ வெடிக்க  பரவலாய் தெரித்த  ஒளித் துகல்கள்  

வானின் -  நட்சத்திரங்கள்...   காதலில் என்னை  

அருகில் வா என்று  கண் சொடுக்கும்  தாரகைகள்!  

 

என் நினைவுப்  பிரவாகமே!  விண்வெளியில் மட்டுமா...  

ஒளியாறு!  என்னை நீ நோக்க  உன்விழி -மொழியி

னின்றும்  பாய்கின்றதே...  என் உயிர்ஆறு 

 

புன்னகைக்கும் -  வெள்ளை நிலாவே அண்டத்துள்

உள்ளதாம்  பால்வெளி (வீதி)!  நான் கண்டதோ...

அதை,  உன்னிடமே 

 

அது என்ன  கருப்பு வளையம்  (பிளாக் ஹோல்)!?  

பிரபஞ்சம் முமுமையும்  அதனால் இழுக்கப்  

படுகின்றனவே! நானோ   உன்வசமாய்  ஈர்க்கப்

படுகின்றேனே!

  

ஆச்சரியமே உன் விழியீர்ப்பு  விசையை அறிய...  கிரகங்

களின்  ஈர்ப்பை அளக்கும்  நியூட்டனின் தத்துவம்  உதவாமல்

போயிற்றே ஆனால் கிரகங்கள்  போன்றே...  தாவலும்  

விலகலும் ஒருங்கே  உன்னிடத்தில்...  எப்படி?     

 

பிரபஞ்ச மையமே சூரிய குடும்பமே போல்...  நானும் -  

உன்னை விட்டு... முப்பத்து மூன்றாயிரம்  ஒளி ஆண்டுகள்  

தொலை தூரத்தில்...  விலகி -  ஒரு மூலையில் -  மின்மினிப்

பூச்சியேபோல்  சுற்றுவதாய்  உணர்கின்றேனே எனக்கும்

உனக்கும்  எதற்கோ...  இந்த இடைவெளி!.   

 

அழகு வீணசே நீ...  கந்தக அமிழத்தை - மழையாய் பொழியாதே!

அமிலம் பட்டு  நம் காதல் கொடி  கருகிவிடக் கூடாதே

 

சூரிய(ன்) குடும்பத்து 'ப்ளூட்டோ'வே போலவும் என்னைத்

தொலைவில் கடைசியாய் வைத்து தனிமையில்  சுழல விடாதே!

   

சூரியன்...   ஹைடிரஜனை,  பிரதானமாக கொண்டு,  எரிந்தழிகின்ற...  

அகில மெழுகுவர்த்தி என் நினைவுகளோ...  உன்னையே -  

ஆதாரமாகக்  கொண்டொளிரும்,  வளரும்...  காதல் வர்த்தி!         

 

அணங்கே     சூரிய குடும்பத்தில்                கோள்கள்           மொத்தம்   

ஒன்பதாம்!   நாமோ...  காதல் பாதைக்குள் இணைந்த பிறகே

அதைப்பற்றி முடிவுசெய்ய வேண்டும்!

 

என் காதல்  பூந் தோட்டமே தமிழ்நாட்டில்...  வானிலை -  ஆய்வு

மைய்யங்கள் - ஏழு இடங்களில்...  சென்னை,  கோயம்புத்தூர்,  

உதகமண்டலம்,  கொடைக்கானல்,  திருச்சி, சேலம்,  மதுரை...

என்று  உள்ளனவாம் உன், இக் -  காணான் தேச -  கவிதைகளை  

நீ ஆயும்...  ஒரே மையம் -  உனக்கே தெரியும்!  அது... எங்கே என்று!    

 

என் காதல் -  ஆய்வு மையமே!  சோலார்  நெப்யூலாவோ...  வாயு

அடர்த்தியுடன்  சுழலும் தூசித் தட்டு நீயோ - என்னைத்  

தென்றலுடன்  சூழ்ந்திட்ட...  மணமோடு, சுகமான -  

மல்லிகை மொட்டு!    

 

காதல்  அரங்கேற்றமே!   தாரகை  ஒளிக்கற்றைகள்  பல தூசு 

அடுக்குகளை  வாயுப் படலங்களை  தாண்டி  வெளிப்படுவதால் 

விட்டு விட்டு  மின்னுதலைச்  செய்கின்றனவாம்நம் கனவு 

ஒளிக் குவியலோ...  இந்திய  பேத மாசுகளை  ஊடுருவி ஒதுக்கி 

ஒற்றுமைத்  தெளிவில் தூய்மையில்  உயர்ந்துமறையாமல் 

ஒளிர்கின்றது!  

 

என் தாக தேசமே பூமியில் மட்டுமன்று  வியாழனிலும்  

தண்ணீர் காற்று  உண்டு என்று  தனியே இங்கே,  என்னை விட்டு  

விலகிச் செல்லாதே என்றாவது ஓர்நாள்  கங்கை காவிரியோடு,  

இணைந்து உறவாடும்...  குமரிக் கடலுக்குள்,  நீந்தி மகிழும்!

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!