அரசியல் அறிவியல்! > கரூரில் நிகழ்வு.
தாய்தமிழ் மரபுப் பண்புஅணுகாத வன் சூத்திரசீழ் ஆகின்றான்;
நோய்ஆணவ கொலைநமைச் சல்வீதி நாயாய் குலைக்கின்றான்;
வாய்எலும் புக்கு வந்தேறி மதம்-பொய் மயக்கத்தில் கடிக்கின்றான்;
திராவிட ஒற்றுமை, ஆரிய ஆளுமை- ஒழிப்புச் சுதந்திரம் விலகி...
தராதரம் இலா-இந்துமத மந்தைவெளி சாதி அடிமாடு மடிகின்றான்!
விடுங்கடா கடவுள் மனநோய் கிருமி!
அடங்கிடா ஆணவ மனுச மிருக மிருதி!
முடங்கிடா சூத்ரசாதி கொலைகருவி!
தடுங்கடா வந்தேறி பேதசேதம் உருவி!
தொடுங்கடா புத்தர் தேசஒளி அருவி!
தேன்தமிழ் தாய்க்கு சூத்திர பஞ்சமன் வேதனை பாவனை இல்லை!
வான்பார் நிலவு விண்-மண் பேதம் பார்த்து ஒளிர்வ தில்லை!
நான்நீயார் ? சூத்திரஆ கமபிரிவினை போற்றும் சாதிமதம் இல்லை!
ஏன்வீண் மோதல் ? அனைவருமே திராவிடரே
புரிந்துமுன் நேருவோம்!
சுயநலம் பூணூல் ஆட சுரண்டுவதை தொழில்-
தெய்வம் என்றும்...
அயல்சுழல் கிரகசோ திடபொய்யால் விண்அளவு
திருடன் வந்தேறியே!
வயல்உழுது உழைப்பவன் சூத்திரன் என்று
இழிவுச் செய்திடாமல்...
கயல்அலை கடலுள் உழல்வாதால் செம்படவன்
எனைக ழாமல்...
உயிர்ஓர் நாள்மரிப்பது தின்னம் உதிர்மயிர் சாதி
தெரிந்து வாழ்வாய்!
உயிரோ அப்பா தந்தது பெயரைஅவர் இட்டது
மாற்ற இயலாது!
உருவம் அன்னை தந்தது தாய்நினைவு
நெஞ்சுள் பதிந்தது!
மயிரோ மண்டையில் முளைப்பது சாதி ஓதி முடிவதோ நாகரிகம் ?
நரைக்கின்ற முடிஉதிர்வை தவிர்க்க இயலாதே இயற்கை சார்ந்தது!
வயிறுமேல் ஏன்நூல்சாதி அசைகிறது ? தேசப் பற்று நாசம் ஆகிறது!
தாகமும்தாம் பத்தியமும் இளமை தழுவும்வரை!
மோகமும் தாபமும் முதுமை அடையும் வரை!
வேகமும்வி வேகமும் தேகம் வீழும்வரை!
தேகமுதி யாகமும் தினவு அடங்கும்வரை!
ஆக(ம)மும் சாதி ஆணவமும் சாகும்வரை!
ஊகமும் உண்மை வெளிச்சமும் பொய்தீ யும்வரை!
கரூரில் நிகழ்ந்தவை வஞ்சக ஆணவம் கொண்ட கொலைகள்தான்
உரவிடும் மதபேதம் ஊழையி டும்நரி களின்ஏ மாற்று ஓதல்கள்ஏன்
அரசகம் சூதுகளை ஓங்கி ஒலிக்கா மல்ப துங்குகின்றன ?
கூரூரம் வன்கொடுமை தந்திரங்கள் வாய்மை வெளிப்படுமோ ?
திராவிட அன்னை கதறு கிறாள் திருந்தாதா நெஞ்சினரை எண்ணி!
பொய்யோ ? வழிபட்ட தெய்வங்களுக்கு விழிகுரு டுற்றதோ ?
மெய்யோ நம்பிய கடவுள் நோயுற்று மாய்ந்திட்டதோ ?
அய்யோ மணிபூர் கலவரமோ கரூரில் குய்யோ முறையோ
மரண ஓலம்ஏன் ? கேட்கின்றதே!
அண்டம் படைத்தயாம் கூடஆகா யம்வெளிச்சம் தந்தாயாம்!
மண்ணோர் உரைக்கின்றார் காற்று நீர்உயிர் கொடுத்தயாம்!
ஆண்டவாநீ இருப்பது உண்மையோ ? என்றால் (கரூரில்)
மாண்டஎம் உறவுகளை தாவுயிர் பித்து.
கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம் ;
வடக்குச் * சூரியனின் வைர அறிவு கொண்டு ;
தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய ...
கற்பிஒன்று காண்மனிதப் பண்பு !
* வடக்குச் சூரியன் அறிவுலக மேதை டாக்டர் அம்பே
த்கார்
https://www.facebook.com/100068056713916/posts/1115019157443298/?mibextid=rS40aB7S9Ucbxw6v rS40aB7S9Ucbxw6v
Comments
Post a Comment