காதல் தேன்கூடு > வெண்பா அணி.


உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர்...  உயிரெழுத்து;
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே!  அவ்விடமே... 
நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்... தாய் நிலைப்பதும்,        
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று; 
புன்னகைத்து நாணும்... அன்னைப்போல், 
செம்மொழியால் யார்... கவிஞர் ஆனாலும்... 
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது?  
விண்வரு டும்தாய் தமிழே! 

பின்னிரவில் கண்விழித்துப் பேணி சுறு சுறுப்பை (மணி)
பன்னி... ரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்... 
பெண்ணேபோல்  விண்ணில்,பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்? 
என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்! 

அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க, 
விழியேன் என்றே விடியல் குளிராய், 
இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய், 
விழிவழி பேசு விழிப்பேன்! 

உலாவும் உலகும் உருளும் கதிரோன், 
நிலாவும் உறையும் நெழிமுகில் வானும், 
துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை, 
பழமாவும் பாடும் தமிழே! 

மலரும் கொடியும் மணமும் முயங்க, 
நிலவும் ஒளிர நிலமும் குளிர, 
களத்துள் முனகிடும் காதலர் அன்ன, 
குலவும் குயில்கள் குரலும் தமிழே! 

சிரிக்கும் இயற்கை திறக்கும் மொழியும், 
தெரிக்கத் தமிழை; தினமும் மதுவை
சுரக்கும் மலர்மேல் சுழல இசையை, 
விரிக்கும் அரியும்... வியக்கும்! 

கமழும் மணத்தை கனியும் வனங்கள், 
உமிழும் மலராய் உதிர்க்கும் கொடிமேல், 
அமிழ்தைப் பருக அமரும்பொன் வண்டும், 
தமிழ்தான் இளமையென தாவும்! 

எடுக்கத்தேன் பூமேல் ஏறும்வண்(டு) அங்கே 
அடுக்கும் இசையும் அதனால் அசைந்துக் 
கொடுத்து மகிழும்பூ கொட்டும் சுவையும் 
துடுக்கும் தமிழுக்கே சொந்தம்! 

கமழும் மணத்தைக் கனியும் வனங்கள் 
உமிழும் சுகத்தை உணர்ந்த மலர்கள் 
அமிழ்தைப் பருக அமரும் அரியும், 
தமிழ்தான் சுவைஎனத் தாவும்! 

எதுவோ ஆதாரம்? தமிழே! 

வெல்லத் தமிழொடு விந்தொடு கற்பனை... 
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்... 
கல்வி முனைமீது காயம் சுழலநீ... 
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்! 

உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!

பனிப்பட அசையும் பாசக் கொடியாய்
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!

அவளின் முகமா? அசையும் இதழா? 
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா? 
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா? 
எதுவாம் எழிலோ? தமிழே! 

தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர் 
வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு - 
மயிலே! 
எயிரைக்காண் பல்போல் இசைக்கும் 
தமிழ்தான்...
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!

வான் தட்டும் மழைஉண்டு வனங்கள் உயரும்;
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்;
காணேட்டு திசைசென்றேன் கவிதை சுழலும்; (நான்)

தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்! 


தொந்தி கதைபதியாய்  !  தாங்கி  துதிப்போன்   -

தந்திக்  கடலுள்  தடுமாறிப்  போடட்டும்  !  

எந்திரமாய்  நானும்  கவிதைநூறு  தந்திடஎன்  -

நந்தா  !  உயிர்பெற்று  வா  !


தமிழ்சுவை அயமனம் தாவஏவும் ஆவல்

உமிழ்' தேன் !' எதுவோ ? உலக அமிழ்தே !நீ 

ஓயா கவிதைஊற்றேஉய்வாபூ வந்தாவாய்!                               ஆயாது இசைஎன்மேல்  ' பா ' வாய் 


என்னைக் களவாடி ஈரோடு போனவனை ...

இன்றும்நான் காணலையே ஏங்குகிறேன் - செல்நிலவே !

சென்றுஅவனைக் கண்டு திரும்பிவரச் சொல்லேன்

கன்னிஎன் கண்ணுறங்கி டும்!



என் ' பார் ' இனிநீ எனக்கெனவே பக்கம்வா 

என்பார்பின் காதலர்இவ் ஆரணங்கை - அன்பால்என் 

செவ்விதழ் கள்நனைய திண்பண்டம்போல்  உண்பார் 

சிவவெனவே ஆசை  சிரிக்க !


என்ன நினைவோநீ ஏங்கி செதுக்கிதினம் 

பின்ன கனவுள் பெண் ஆனவள் என்செய்வேன் ?  

மின்னும் இடிமுகில் திக்குஅறி  விண் கண்ணுள்

அசைய உன்னை நான்   காண்பேன்  !


எந்நாளும் நம்நாளே ! இந்நாளோ ... உன்னைஇப் 

பெண்ணால் ஆளஅந்நாள் பின்னாளில் பொன்நாளே

என்னைநீ ஆளும்நாள் எந்நாளோ ? பூஆள்க

என்சக் ரவர்த்தி யே !


செந்தமிழ் சொற்களைத் தேனென வேதினம்  ,

சொந்தம் கொண்டேபடித்  (  து ) உண்டாயோ ? - தந்தமே !     

தந்ததும் முத்தங்கள் சந்தங்கள் சிந்திட  ...

வந்ததே வாய்வழி தேன்  !


வேலைப் பழிக்கும்உன் மென்கூர்மை நோக்குதாக்க ,

காலைப் பிடித்தேன் கவிழ்ந்தேன் , இடுப்பொடித்தாய் ;

மாலைவந்தால் நாளும் மயக்கி நொறுக்குகின்றாய்

சேலையணி ( யா ) கோயில் சிலையே !

 

காணுள்ஓர் பூ மேல் கவிழ்கரு வண்டுகண்டு ,

தேன்தீண்டும் பாவை திறக்கைமை கண்மூட ;

மேனியுள் ஊர்ந்துபின் மீண்டிடும் உணர்வேஉன் ,

ஊணுளே ஒன்றும் நிலாநான் !


வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்

தேனே அருந்தஏங்கும் திங்களே ! ஏன் நாணும் 

அமிழ்தே ! எனக்காக ஆழ்ந்துப் பணிசெய்

தமிழ்சங்க மாய்தேன் தருவேன்!


பின்னிடும்உன் புன்னகையின் பின்னலில் என்னிரு

கண்கள் இணங்கிட , கண்டிட்ட ஆசைகள் ;  

தம்முள் குதித்திடத் தாவுகின்றேன் ; என்னை வறுத்தும் ,

தண்ணிலவை தண்டிவா காதல் !

 

அரும்பிடவே காதல்அலை ஆசைகளாய் மாறி ,

விரும்பி உனக்கு விருந்தாகும் நேரம் ;

திரும்பியே செல்ல , சிறுமியோ ? யானும் ;

கரும்புஎனக் ( கு ) நீ உண் கனி !

 

முல்லைகொடி மொட்டுமலரை முட்டுகின்ற சித்தே ? நீ ,

எல்லையிலா ( து ) உன்றன் இதழ் உறிஞ்ச தேன்அதில்என்

வெள்ளைப்பல் பட்ட பரிதவிப்பில் செல்லாதே !

தொல்லையிடை சொர்க்கம் கான்தொட்டு !


ÌÊÁÐ ±ýÚ Ìɢ «ì ¦¸¡Êô â«ýÉ

¸Ê츢ýÈ¡ö ±ý¨É ¸ÊÅñ§¼¡ - ¯ý

±Æ¢øÀ¢Ê¢ø ÐÊ츢ýÈɧűý ÅÆ¢¸û!

þýÀ§Á¡? ÐýÀ§Á¡? ¡Ы¾¢¸õ ¸¡¾Ä¢ø

ÐýÀòÐû þýÀ§Á ¦º¡ø!


மதுவழங்கும் பூவுள் மயங்கிடும் வண்டு

எதுகையோடு மோனை இணை புதுக்கவிதை ;

பாடும்போது பரவசத்தில் பூவனம்...

தேடிடு மோதென்றல் துணை !

 

பற்றத்தான்காதல் தைபற்றத்தான்மாமன் கை

முற்றத்தான் சேய்ஆசைமுத்தமிடஇன்புற்று

பற்றத்தன்அன்னைமுலைபத்துமாதத்துள்

தொற்றப்பிறப்பா நோனெஞ்சே


அவனின் நினைவால் அன்றாடம் தீய்ந்தேன்

குவியலை காதல் கொதிகலன் ஆக

துவளிடை காய துயரத்தால் தேய

தவிக்க வோசைநிலைகள்


மேகம் விலகிட மின்னல் பளிச்சிட

தாகபுவி வெப்பம் தணித்திடும் பூமழையே !

வேகமாய் ஓடுபிரிய மேனி கருத்தவனை ...

தேகம் சிவக்கவரச் செய் !

தொட்டாலோ மெய்சிலிர்க்கும் ; தொட்டுஅ விழஆசை , திட்டாலோ பண்உதிர்க்கும் ; தென்றல் கனியிதழ்தேன் , சொட்டால்உன் வாய்மணக்கும் ; சொக்கிமகிழ நீதாலி ... கட்டாமல் நான்மணந்தால் காதல் ! அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான் மெல்லிய பூங்கரத்தால் மேனியை மாலையாக்கி முல்லைச் சரவாயால் முத்தமிட காண்பேன்என் மல்லிகைக்குள் உன்னால் மணம் !
முன்னால்நீ தோன்ற முழுநில வாய்காண்பேன் தன்னால் அகலும் தவிப்பே ! எனக்கு , என் அன்பேநாம் ஒன்றஉன்னால் அந்நாள் வருமோபின்         


வந்தால்நான்  வாழ்வேன் நெடுநாள் !

 


Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!